Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs
 
நீட்ஸ்
  • முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்குக் கை கொடுக்கவும் ஊக்கமளிக்கவும் எனத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு சிறப்புற செயல்படுத்தப்படுகிறது
  • பயனுற விழைவோர் வயது பொதுவாக 21-45 க்குள் இருக்க வேண்டும். பெண்கள்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்/ பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு 55 வயது வரை தளர்வு உண்டு
  • ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.500.00 இலட்சம் வரையிலான திட்டத் தொகையில் உற்பத்தி அல்லது சேவைத் தொழில் நிறுவனங்கள்
  • குறைந்தபட்ச்சம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி / தொழில்நுட்ப கல்வியில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் ( Diploma/ITI)
  • தொழில் முனைவோர் பங்களிப்பு பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% சிறப்புப் பிரிவினருக்கு 5%
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் / வணிக வங்கிகள்/ தாய்கோ வங்கி மூலமாக கடனுதவி
  • தனி நபர் முதலீட்டு மானியம் திட்டத்தொகையில் 25% (உச்ச வரம்பு ரூ.75.00 இலட்சம்)
  • கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுமையும் 3% பின்முனை வட்டி மானியம்