Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Untitled Document
 

நீட்ஸ் (NEEDS)

அரசாணை நிலை எண் 49, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (டி2) துறை, நாள் 29.10.2012 இன் படி செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் படித்த இளைஞர்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு உற்பத்தி அல்லது சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களைத் தொடங்குதற்கான திட்ட அறிக்கைகளை வடிவமைக்கவும் கடனுதவி பெறுதற்கு நிதி நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதன்மைத் தகுதி முதல் தலைமுறைத் தொழில்முனைவோராயிருத்தல். திட்டத்தொகை ரூ.10.00 இலட்சத்துக்கு மேலும் ரூ. 500.00 இலட்சத்தை மிகாமலும் இருக்க வேண்டும். ஊக்குதவித் தொகை திட்டத் தொகையில் 25% (ஊச்சவரம்பு ரூ.75.00 இலட்சம்) நிலம் மற்றும் கட்டடத்துக்கான வாடகை அல்லது குத்தகைத் தொகை, தொழில்நுட்பம் பெறுதற்கான செலவு மற்றும் தொடக்க நிலை ஆயத்தச் செலவுகள் போன்றவை ஊக்குதவித் தொகை மதிப்பீட்டில் சேரா.

யூ.ஒய்.ஈ.ஜி.பி (UYEGP)

சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிந்த நிலையில் உள்ள, குறிப்பாக படித்த வேலையற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைச் சீர்செய்ய அவர்கள் தாமாகத் தொழில் தொடங்கும் தொழில்முனைவோராவதை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையால் வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (யூ.ஒய்.ஈ.ஜி.பி) செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் வாணிகம் சார்ந்த தொழில் நிறுவனங்களை அதிகபட்சம் முறையே ரூ.15 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் நிறுவிட 25% அரசு ஊக்குதவித் தொகையுடன் (உச்சவரம்பு ரூ.3.75 இலட்சம்) நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

ஊக்குதவிகள் (Incentives)

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேளாண்மைக்கு அடுத்த நிலையில் பேரளவு வேலைவாய்ப்பினை வழங்குவதோடல்லாமல் மாநிலத்திலுள்ள தொழில் அலகுகளின் எண்ணிக்கை, உற்பத்தித் துறையில் விளைபொருள் மதிப்பு, ஏற்றுமதி மதிப்பு ஆகியவற்றிலும் பெரும்பங்கைக் கொண்டிருப்பதால் அத்தகு நிறுவனங்களை ஊக்குவிப்பதும் மிக்க உயிர்ப்போடு வைத்திருப்பதும் இன்றியமையாத் தேவை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பல ஊக்குதவிகளை வழங்கி வருகிறது.