Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
LTPT field inspection Status Check

உலக முதலீட்டாளர் மாநாடு 2019

தமிழக அரசால் செப்டம்பர் 2019 ல் நடத்தப்பட்ட இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ல் மொத்தம் பெறப்பட்ட ரூ.300341 கோடிக்கான முதலீட்டுக்கான முன்மொழிவுகளில் ரூ.32205.75 கோடிக்கான முன்மொழிவுகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையால் பெறாப்பட்டதென்பது சாதனை ஆகும்.

முதலீட்டாளர் மாநாட்டுக்கான முன்னோட்டமாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு 32 மாவட்டங்களில் விழிப்புணர்வுச் சாலைக் கூடல்கள் நிகழ்த்தப்பட்டன. மேலும் நாட்டின் மிக முக்கிய 6 நகரங்களிலும் இத்தகைய சாலைக் கூடல்கள் நிகழ்த்தப்பட்டன. மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் பெருமக்கள் யாவரும் இத்தகு சாலைக் கூடல்களில் கலந்து கொண்டு சிறப்பித்தமையால் இக்கூடல்கள் மிகு கவனத்தை ஈர்த்ததோடு அதிக முதலீட்டினை ஈர்த்ததன் மூலம் நல்விளைவுகளையும் கொணர்ந்தன.

அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு தொழிற்பேட்டைகள் மற்றும் தொழிற்பூங்காக்களில் நில ஒதுக்கீடு, நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுதல், அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய இசைவுகள் / ஒப்புதல்கள் / உரிமங்கள் பெறுதல், முதலீட்டு மானியம், குறைவழுத்த மின் கட்டண மானியம், மின்னாக்கி மானியம், பின் முனை வட்டி மானியம் போன்ற மானியங்கள் பெறுதல் இவற்றில் உதவ அரசு உறுதி பூண்டுள்ளது.

அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறாய்யால் செயல்படுத்தப்படும் கீழ்வரும் திட்டங்களின் கீழ் பயன் பெற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

1. அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ஒப்புதல்கள் / உரிமங்கள் பெறுதற்கான ஒற்றைச் சாளரத் தகவு இங்கே சொடுக்கவும் https://easybusiness.tn.gov.in/msme/
2. அரசுத் திட்டங்களின் கீழ் கடன் பெற
நீட்ஸ்: இங்கே சொடுக்கவும்
யூ ஒய் ஈ ஜி பி: இங்கே சொடுக்கவும்
பி எம் ஈ ஜி பி: இங்கே சொடுக்கவும்
வங்கிக் கடன் பெற: இங்கே சொடுக்கவும்
3. அரசு மானியங்கள் பெற:
முதலீட்டு மானியம்: இங்கே சொடுக்கவும்
குறைவழுத்த மின் கட்டண மானியம்: இங்கே சொடுக்கவும்
மின்னாக்கி மானியம்: இங்கே சொடுக்கவும்
பின்முனை வட்டி மானியம்: இங்கே சொடுக்கவும்
ஆற்றல் தணிக்கை மானியம்: இங்கே சொடுக்கவும்
திறன் பயிற்சி : இங்கே சொடுக்கவும்
உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ல் செய்து கொள்ளப்பட்ட தங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை அறிய
இங்கே சொடுக்கவும்.