Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

முதலீட்டு மானியம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கீழ்கண்ட மானியங்கள் வழங்கப்படுகிறது:
  • தகுதியான இயந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • மகளிர் /ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வழங்கப்படுகிறது.
  • குறு நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 10 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
  • நடைமுறையில் உள்ள குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் முறையே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக உயர்வு பெறும் பட்சத்தில் அந்நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • மாசற்ற மற்றும் சுற்றுச்சூலில் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படுகிறது.

அடிப்படைத் தகுதிகள்

  • மாநிலத்தின் எப்பகுதியிலும் நிறுவப்படும், அனைத்து புதிய குறுத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள்.
  • தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் அமைக்கப்படும் கீழ்கண்ட 24 சிறப்பு வகை சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்:
  • மின் மற்றும் மின்னணு பொருட்கள்
  • தோல் மற்றும் தோல்பொருட்கள் உற்பத்தி
  • வாகன உதிரி பாகங்கள்
  • மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள்
  • சுரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள்
  • ஏற்றுமதிக்கான தங்கம் மற்றம் வைர நகைகள்
  • மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்
  • மின் வாகன கடன்கள், மின்னேற்ற உற்பத்தி கட்டமைப்புகள் மற்றும் கடன்கள்
  • சிக்கன அடக்கவிலை கட்டுமானப் பொருட்கள்
  • ஆயத்த ஆடைகள்
  • உணவு பதப்படுத்துதல்
  • நெகிழி (ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி மற்றும் தூக்கி எறியப்படும் நெகிழி நீங்கலாக)
  • இரப்பர் உற்பத்தி நிறுவனங்கள்
  • உயிர் தொழில்நுட்பம்
  • பெட்ரோலிய இரசாயனம் மற்றும் சிறப்பு இரசாயனங்கள்
  • மருத்துவ உபகரணங்கள் மற்றும் கடன்கள்
  • விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள்
  • தொழில் நுட்ப ஜவுளி மற்றும் மருத்துவ ஜவுளி
  • விண்வெளி, பாதுகாப்பு பயன்பாடுகள் மற்றும் உபகரணங்கள்
  • மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றம் உற்பத்தி
  • ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களுக்கு பதிலான மாற்று நிகிழி
  • மின்னணு கழிவு பதப்படுத்துதல்
  • தொழில் 4.0
  • பாரம்பரியத் தொழில்கள்.
  • தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 254 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
  • மாநிலத்தின் 388 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
  • மேற்கண்ட வகைகளைச் சார்ந்த, தற்போது இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள்.
  • 2021-22 ஆம் ஆண்டில் 3,545 நிறுவனங்களுக்கு ரூ.35999.99 இலட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது.