Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

தரச் சான்றிதழ் மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

உற்பத்திச் செயல்முறைகள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கான தர நிர்ணயம் / சான்றிதழ்களான பன்னாட்டுத்தர அமைப்பு ஐஎஸ்ஓ 9000/ஐஎஸ்ஓ 14001/ஐஎஸ்ஓ 22000/ஐஎஸ்ஓ 22000/ஆபத்து பகுப்பாய்வு மற்றும் சிக்கலான கட்டுப்பாட்டு புள்ளி (HACCP)/ நல்ல சுகாதார நடைமுறைகள் (GHP) / நல்ல உற்பத்திச் செயல் முறைகள்(GMP) சான்றிதழ்கள், இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS)சான்றிதழ், பூஜ்ஜிய குறைபாடு மற்றும் பூஜ்ஜியவிளைவு (ZED) மற்றும் உரிய அதிகார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டுத் தரச்சான்றிதழ் பெறுவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்குறித்த சான்றிதழ்களைப் பெற்ற நிறுவனங்களுக்கு அவற்றைப் பெறுவதற்காக உரியதர அமைப்புகளுக்கு செலுத்தப்பட்ட கட்டணம், அதிகபட்சம் தேசிய அளவிலான சான்றிதழ்களூக்கு ரூ.2.00 இலட்சம், பன்னாட்டுச் சான்றிதழ்களூக்கு ரூ.10.00 இலட்சம் அரசால் திருப்பித் தரப்படும்.

2020-21 நிதி ஆண்டில் தமிழ்நாட்டிலமைந்த 92 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.60.35 இலட்சம் தரச்சான்றிதழ் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.