Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

பின் முனை வட்டி மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

தகுதி பெற்ற நிறுவனங்கள்

தொழில்நுட்ப மேம்பாடு / நவீனமயமாக்கல் திட்டம், குறு மற்றும் சிறு நிறுவன நிதியத் திட்டம் எனப் புதுப்பெயர் பெற்றுள்ள தேசிய ஈவுப் பங்கு நிதியத்திட்டம், என் எஸ் ஐ சி –சிட்கோ கூட்டுறவின் கீழான பன்னாட்டுத் தரச்சான்று / ஆய்வு & மேம்பாடு திட்டம், குறு மற்றும் சிறு நிறுவன கடன் உத்தரவாதப் பிணையத் திட்டம் இவற்றின் கீழ் பருவக்கடன் பெற்ற குறு மற்றும் சிறு நிறுவனங்கள்.

இந்திய அரசின் கடனுடன் இணைக்கப்பட்ட மூலதன மானியத் திட்டத்தின் (சிஎல்சிஎஸ்எஸ்) கீழ் கடன் பெற்று, திட்ட வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, குறிப்பிட்ட உபதுறைகள் / தயாரிப்புகளில் நன்கு நிறுவப்பட்ட மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் புகுத்தியுள்ள நிறுவனங்கள், விரிவாக்கத்துடன் அல்லது விரிவாக்கமின்றி, தங்கள் தற்போதைய ஆலை மற்றும் இயந்திரங்களை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் புதிய நிறுவனங்கள் அல்லது நடப்பிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

மானிய அளவு

பெற்ற கடனுக்கான 5% வட்டி மானியம், அதிகபட்சம் 5 ஆண்டுகள்வரை (கடன் திரும்பச் செலுத்தும் காலம் எதுவாயினும்) மேலும் ரூ.100.00 இலட்சம் வரையிலானகடன்களுக்குஅதிகபட்சவட்டிமானியம் ரூ.10.00 இலட்சம்வரைமட்டுமே.

செயல்படுத்தும் அமைப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வழங்கிய இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) வழங்கிய கடன்களுக்கு இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி).

பிற வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு பொதுமேலாளர், மாவட்டத்தொழில்மையம் / மண்டல இணைஇயக்குநர், சென்னை

வட்டிமானியம்பட்டுவாடா செய்யப்படும் முறை

வட்டி மானியம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அடிப்படையில் நிதி நிறுவனங்களுக்கு திருப்பி அளிக்கப்படும். மூலதனக் கடன் மற்றும் வட்டித்தவணை தொழில் நிறுவனத்தால் உரிய காலக் கெடுவுக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். நிதி நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட காலமுறைப்படி கடன் மற்றும் வட்டி செலுத்துவதில் ஏதேனும் பிறழ்வு இருந்தால், அத்தகைய காலத்தில் வட்டி மானியம் வழங்கப்படாது. இருப்பி னும், விடுபட்டுப் போன தவணைத் தொகையை காலம் மீறி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செலுத்திடும் நேர்வில், அபராதவட்டி தவிர்த்து வட்டி மானியம் மட்டும் வழங்கப்படும். வட்டி மானியம் கோரப்படும் காலகட்டத்தில் நிறுவனம் இயக்க நிலையில் இருந்திட வேண்டும்.