Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

ஊதியப்பட்டி மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

20 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு அதன் முதலாளி தன் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதிக்கு நிறுவனப் பங்காக செலுத்தும் தொகைக்காக நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் மூன்றாண்டுகளுக்கு ஒரு தொழிலாளருக்கு ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.24000/- என்ற வீதத்தில் மானியம் வழங்கப்படும்.

தகுதி பெற்ற நிறுவனங்கள்
  • தமிழ்நாட்டில் எவ்விடத்திலும் தொடங்கப்படும் குறு உற்பத்தித் தொழில் நிறுவனங்கள்.
  • தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் பிந்தங்கியவை என அறிவிக்கை செய்யப்பட்ட 254 வட்டாரங்களில் மற்றும் அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களான சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற அமைப்புகளால் தொழிற்பேட்டைகள் / தொழிற் பூங்காக்களில் நிறுவப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள்.
  • தமிழ்நாட்டில் 388 வட்டாரங்களில் நிறுவப்படும் வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள்.