Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

ஆற்றல் தணிக்கை மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

PEACE –ஆற்றல் தணிக்கைப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான மானியம்

  • இத்திட்டத்தின் நோக்கம் ஆற்றல் தணிக்கைப் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதும் நிறுவனங்கள் ஆற்றலைச் சேமித்தலையும் ஆற்றலுக்கான செலவினத்தைக் குறைப்பதன் மூலம் நிதி சேமித்தலையும் சாத்தியப்படுத்துவதும் ஆகும்.
  • ஆற்றல் தணிக்கை மேற்கொண்டு அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்தியதன் வாயிலாக நுகரப்பட்ட மின்பயனீட்டு அலகின் அடிப்படையில் ஒரு பொருளுற்பத்திகாக செலவிடப்படும் ஆற்றலில் குறைந்தபட்சம் 15% சேமிப்பைச் சாத்தியமாக்கிய, தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்களும் இம்மானியம் பெறத்தகுதி பெற்றவை.
  • ஆற்றல் தணிக்கைப் பரிந்துரைப்படி வாங்கப்பட்ட இயந்திர தளவாடங்கள் மற்றும் தொழில் நுட்பத்துக்கான செலவுமதிப்பில் 25%, உச்சவரம்பாக ரூ.200000/- மானியம் வழங்கப்படும். ஆற்றல்தணிக்கைக்குப் பிறகு செய்யப்பட்ட முதலீடுகள் மட்டுமே மானியத்துக்குத் தகுதியானவை.
  • பரிந்துரைகளைச் செயல்படுத்தி ஆற்றலை சேமித்த நிறுவனங்கள் பரிந்துரைகள் செயலாக்கம் பெற்ற நாளிலிருந்து மூன்றுமாதங்களுக்குப் பின்னாகவும் ஓராண்டு முடிவதற்குள்ளாகவும் உரிய மாவட்டத் தொழில்மையம் / மண்டலஇணைஇயக்குநரகம், சென்னை அலுவலகம் பெறும் விதமாக விண்ணப்பத்தினை இணையத்தில் பதிவிக்கவேண்டும்.
  • ஆற்றல் நுகர்வில் சேமிப்பானது குறிப்பிட்ட பொருளுற்பத்திக்காக நுகரப்படும் ஆற்றல் அளவை (கிலோவாட்மணி / கிலோகலோரி) தணிக்கைப் பரிந்துரை செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய பன்னிரண்டு மாதங்களின் சராசரியையும் தணிக்கைப் பரிந்துரை செயல்படுத்தப்பட்ட பின் மூன்று மாதங்களின் சராசரியையும் ஒப்பிட்டு மதிப்பிடப்படும். மானியம் ஆற்றல் தணிக்கைப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆற்றல் தணிக்கையாளரின் சான்று பெறப்பட்ட பின் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்களுக்கு பட்டுவாடா செய்யப்படும். பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான நிதித் தேவைகளுக்கான வங்கிக்கடன் பெறப்பட்டிருந்தால் கடன்கணக்கு நடப்பில் இருக்கும் பட்சத்தில் மானியம் நேரடியாகக் கடன்கணக்கில் பட்டுவாடா செய்யப்படும்.

தகுதி பெறாத நிறுவனங்கள்

  • சேவைத் துறை நிறுவனங்கள் மற்றும் இதே செயலாக்கத்துக்காக ஏற்கனவே தமிழக அரசின் வேறுதுறைகள் அல்லது ஒன்றிய அரசு மூலம் மானியம் பெற்ற நிறுவனங்கள்