Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

முதலீட்டு மானியத்திற்கான விண்ணப்பத்துடன் பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள்

  • உத்யோக் ஆதார் ஒப்பந்தம் அல்லது உத்யம் பதிவு சான்றிதழ்.
  • பங்குதாரர் நிறுவனமானால் பங்கு ஒப்பந்தம்: வரையறுக்கப்பட்ட நிறுவனமானால் பதிவு சான்றிதழ்.
  • சொந்த மனையில் செயல்படும் நிறுவனமானால் நிலம் வாங்கிய பத்திரம்.
  • குத்தகை அல்லது வாடகை மனை அல்லது கட்டிடத்தில் இயங்குகின்ற நிறுவனமானால் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கான குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தம் ரூ. 10 மதிப்பிலான முத்திரைத்தாளில்
  • வங்கி அல்லது நிதி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கடன் ஒப்பளிப்பு ஆணை.
  • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் வழங்கப்பட்ட மின் இணைப்பு ஆணை மற்றும் அட்டை.
  • இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதற்கான இரசீதுகள் மற்றும் ஒப்புகைச் சீட்டு வங்கி மேலாளரின் மேலொப்பத்துடன்.
  • வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிய நாளில் நிறுவனத்தின் நிலையான சொத்து மதிப்பு குறித்த பட்டயக் கணக்கரின் சான்றிதழ்.
  • சுயமாக கட்டமைக்கப்பட்ட இயந்திரத் தளவாடங்கள் இருப்பின் அவற்றின் மதிப்பு குறித்த பட்டயக் கணக்கரின் சான்றிதழ் மற்றும் அவற்றை வாங்குவதற்கு செலவழிக்கப்பட்ட தொகை குறித்த பட்டயக் கணக்கரின் சான்றிதழ்.
  • வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிய பின் வழங்கப்பட்ட முதல் விற்பனை இரசீது.
  • விரிவாக்கம் மற்றும் பல்வகையாக்கம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அது குறித்த கூடுதல் ஆவணங்கள்

பட்டயக் கணக்கரின் கீழ்வரும் சான்றிதழ்கள்

  • விரிவாக்கம் / பல்வகையாக்கத்துக்குப் பின் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிய நாள்.
  • விரிவாக்கம் / பல்வகையாக்கத்துக்கு முன் இயந்திர தளவாடங்களின் மதிப்பு / விரிவாக்கம் / பல்வகையாக்கத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்ட இயந்திர தளவாடங்களின் மதிப்பு / மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு (%).
  • விரிவாக்கம் / பல்வகையாக்கத்துக்கு முன்பான மூன்று ஆண்டுகளின் ஆண்டு உற்பத்தி திறன் / ஆண்டு விற்று முதல் (உற்பத்தி செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு ரூபாயில்) - விரிவாக்கம் / பல்வகையாக்கத்துக்கு பின் ஆண்டு உற்பத்தி திறன் மற்றும் ஆண்டு விற்று முதல் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு.
  • குறிப்பு:-

  • நகல்கள் பதிவேற்றப்பட வேண்டும். ஆய்வு தருணத்தில் உண்மை சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்காக பெறப்பட்டு திருப்பித் தரப்படும். உண்மை சான்றிதழ்கள் வங்கி வசம் இருந்தால், வங்கி மேலாளரின் மேலொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல்கள் தரப்பட வேண்டும்.
  • கோப்பு PDF வடிவில் அதிகபட்சம் 200 kb இருக்க வேண்டும்.