Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

ஆற்றல் தணிக்கை பரிந்துரையை செயல்படுத்துவதற்கான மானியத்திற்கான விண்ணப்பத்துடன் பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள்.

  • உத்யோக் ஆதார் ஒப்பந்தம் அல்லது உத்யம் பதிவு சான்றிதழ்.
  • பங்குதாரர் நிறுவனமானால் பங்கு ஒப்பந்தம்: வரையறுக்கப்பட்ட நிறுவனமானால் பதிவு சான்றிதழ் / சங்கமாக இருப்பின் கூட்டுறவு பதிவாளரின் சான்றிதழ்.
  • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் வழங்கப்பட்ட மின் இணைப்பு ஆணை மற்றும் அட்டை.
  • மின் ஆற்றல் அல்லாமல் வேறு ஆற்றல் மூலங்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கான நிரூபணம்.
  • ஆற்றல் தணிக்கை பரிந்துரையை செயல்படுத்த இயந்திர தளவாடங்கள் வாங்க கடன் பெற்றிருப்பின் வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணை.
  • ஆற்றல் தணிக்கையாளர் / தணிக்கை நிறுவனரை அமர்த்தியதற்கான ஆவணம்.
  • ஆற்றல் தணிக்கையாளருக்கு வழங்கப்பட்ட அங்கீகார சான்றிதழ்.
  • நிறுவனத்தில் ஆற்றல் தணிக்கையாளர் பணியமர்த்தப்பட்டிருந்தால் அதற்கான நிரூபணம்.
  • ஆற்றல் தணிக்கையாளர், ஆற்றல் தணிக்கை பரிந்துரை செயல்படுத்தப்பட்டது குறித்தும் அதனால் ஆற்றல் சேமிக்கப்பட்டது குறித்தும் வழங்கும் சான்றிதழ்.
  • ஆற்றல் தணிக்கை பரிந்துரையை செயல்படுத்த இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதற்கான இரசீதுகள் மற்றும் ஒப்புகைச் சீட்டு வங்கி மேலாளரின் மேலொப்பத்துடன்.
    • குறிப்பு:-

      நகல்கள் பதிவேற்றப்பட வேண்டும். ஆய்வு தருணத்தில் உண்மை சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்காக பெறப்பட்டு திருப்பித் தரப்படும். உண்மை சான்றிதழ்கள் வங்கி வசம் இருந்தால், வங்கி மேலாளரின் மேலொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல்கள் தரப்பட வேண்டும்.

    • கோப்பு PDF வடிவில் அதிகபட்சம் 200 kb இருக்க வேண்டும்.