Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

குறைவழுத்த மின் கட்டண மானியம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

வாணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற நாள் இதில் எது பிந்தையதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்குச் செலுத்தப்பட்ட மின் கட்டணத்தொகையில் 20% தொழில் முனைவோருக்கு அரசால் மானியமாகத் திருப்பித் தரப்படும்.

புதிய நிறுவனங்கள்:

  • அ. மாநிலத்தில் எங்கும் நிறுவப்படும் அனைத்து புதிய குறு உற்பத்தி நிறுவனங்கள்.
  • ஆ. தொழில் ரீதியாக பின்தங்கியனவாக அறிவிக்கப்பட்டுள்ள 251 வட்டாரங்களிலும் நிறுவப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள்.
  • இ. மாநிலத்தின் 385 வட்டாரங்களிலும் நிறுவப்படும் வேளாண் சார்ந்த அனைத்து புதிய தொழில் நிறுவனங்கள்.

விரிவாக்கம் / பல்வகைப்படுத்துதல் நிறுவனங்கள்:

இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25% உயர்வு மற்றும் ஏற்கனவே தயாரிப்பிலுள்ள பொருட்கள் அல்லது புத்தினங்களின் உற்பத்தியினை ஆண்டு விற்று முதலில் 25% உயர்வு பெறுமளவுக்கு உயர்த்துதல் எங்கிற நிபந்தனையை நிறைவு செய்யும் வகையில் விரிவாக்கம் (அல்லது) பல்வகைப்படுத்தலில் ஈடுபடும் நிறுவனங்களும் மேற்குறித்த குறைவழுத்த மிங்கட்டண மானியத்தினைப் பெறத் தகுதி பெறுகின்றன.

விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு:

குறைவழுத்த மின் கட்டண மானியம் பெறுவதற்கான தகுதிச் சான்றிதழ் கோரி வாணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற நாள் இதில் எது பிந்தையதோ அந்நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் இணைய வழி விண்ணப்பிக்க வேண்டும். மானியத்துக்கான முதல் கேட்பு தகுதிச் சான்றிதழ் வழங்கபட்ட 30 நாட்களுக்குள் தரப்பட வேண்டும். அடுத்தடுத்த கேட்புகள் ஆறு மாதங்களுக்கொருமுறை இணைய வழி அனுப்ப்ப்பட வேண்டும். ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்ட்த்தில் செலுத்தப்பட்ட மின் கட்டணத்துக்கான மானியத்தை ஆகஸ்டு 31 ஆம் நாளுக்குள்ளும் கோரிய விண்ணப்பத்தினை வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் இணைய வழியாகப் பதிவு செய்ய வேண்டும்.