Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

ஆற்றல் தணிக்கை மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

முகப்புரை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆற்றல் பயனீட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடுஅரசு ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு (PEACE) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆகும் செலவில் 75% உம் அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆற்றல் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பெறப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தொழில்நுட்பம் இவற்றுக்கான செலவில் 50% உம் அரசால் திருப்பித் தரப்படுகிறது.

திட்டத்தின் நோக்கங்கள்

  • ஆற்றலைச் சேமிப்பதற்கான புதிய நுட்பங்கள் / தொழில் நுட்பங்களின் நன்மைகள் / சாதக அம்சங்கள் பற்றி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • பேரளவு ஆற்றலை நுகரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனக் குழுமங்களை ஆழமாக ஆய்வு செய்து ஆற்றல் சேமிப்பில் ஏற்படும் இடைவெளிகள் மற்றும் சாத்தியமான தடைகளை அடையாளம் காணுதல் மற்றும் ஆற்றல் பயனீட்டுத் திறனை மிகுப்பிப்பதற்கான பொருத்தமான நுட்பங்கள் / தொழில் நுட்பங்களை பின்பற்றுவதை ஊக்குவித்தல்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றல் திறனை மேம்படுத்தவும் மாற்று ஆற்றல் மூலங்களை / எரிபொருட்களைப் பயன்படுத்தவும் தோதாக ஆற்றல் தணிக்கை மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் தணிக்கை முடிவில் பெறப்படும் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணித்தல்.

PEACE – விரிவான ஆற்றல் தணிக்கை மேற்கொள்வதற்கான மானியம்

  • இத்திட்டத்தின் கீழ் ஆற்றல் தணிக்கை மேற்கொள்வதன் முதன்மை நோக்கம் பயன்பாட்டில் உள்ள முக்கிய ஆற்றல் மூலங்களை அடையாளம் காணுதல், ஆற்றல் பயன்பாட்டில் உள்ள குறைபாடுகளை அடையாளம் காணுதல், ஆற்றல் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணுதல், ஆற்றல் மூலங்களின் நுகர்வு அளவை தீர்மானித்தல் மற்றும் தொழில்துறையில் ஆற்றல் சேமிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைத்தல் ஆகியனவாகும்.
  • தகுதி வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை முடிந்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மானியம் கோரும் விண்ணப்பத்தினைத் தாக்கல் செய்ய வேண்டும்.
  • ஆற்றல் பயனீட்டுத் திறன் அமைப்பால் ஏற்பளிக்கப்பட்ட தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களைக் கொண்டு மட்டுமே தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மானிய அளவு

  • ஆற்றல் தணிக்கைக்கான கட்டணத் தொகையில் 75% (உச்சவரம்பாக ஒரு தொழில் அலகுக்கு ஒரு ஆற்றல் தணிக்கைக்கு ரூ.0.75 இலட்சம்) ஆற்றல் தணிக்கை மேற்கொள்வதற்கான தொழில் முறைக் கட்டணம் மட்டுமே மானியத்துக்குரியதாகும்.
  • ஓன்றுக்கு மேற்பட்ட தொழில் அலகுகளைக் கொண்ட நிறுவனங்கள் ஒவ்வொரு அலகுக்கும் தனித்தனியாக ஆற்றல் தணிக்கை மானியம் கோரலாம்.
  • ஒருதொழில் அலகு மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆற்றல் தணிக்கை மேற்கொண்டு அதற்கான மானியம் கோரலாம். மானிய உச்சவரம்பு முதல் தணிக்கைக்கும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கைக்கும் சேர்த்து கூட்டாகவரம்பிடப்படவில்லை. முதல் தணிக்கைக்குத் தனியாகவும் தொடர்ச்சியான தணிக்கைகளுக்கு தனியாகவுமே விதிக்கப்பட்டுள்ளது.