Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

மின்னாக்கி மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

  • தமிழ்நாட்டினுள் இயங்கும் புதிய மற்றும் நடப்பிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் தமது ஆற்றல் பயன்பாட்டுக்கெனப் புதிதாக வாங்கி நிறுவும் 320 கிவோ ஆ க்குட்பட்ட திறன் கொண்ட மின்னாக்கிகள் மானியம் பெற தகுதியுடையவை.
  • மின்னாக்கி வாங்கப்பட்ட நாள் அல்லது நிறுவப்பட்ட நாள், அதாவது மின் ஆய்வு இயக்குநரகப் பாதுகாப்பு ஆய்வுச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் இவற்றுள் எது பிந்தையதோ அதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பம் பதிவிக்கப்பட வேண்டும்.
  • சேவைத் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் இல்லை.
  • மேற்குறித்த காலக்கெடுவைத் தாண்டிப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா.