Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Dos & Don'ts

தவறாது செய்யத்தக்கன – தவிர்க்கப்பட வேண்டியன

  • இணையவழியில் விண்ணப்பதினை பதிவிடும் முன் தளத்தில் காணலாகும் திட்ட விவரங்கள், செறிகாட்டுதல், மாதிரி விண்ணப்பம், விண்ணப்பம் பதிவிடும் முறை ஆகியனவற்றைப் படித்தறிந்து கொள்க
  • தேவைப்படின் வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து விவரங்களைப் கையால் எழுதிச் சரி பார்த்துக் கொள்ளுதல் நலம்
  • பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள் jpeg கோப்பு வடிவில் 50 kb நினைவக அளவுக்குட்பட்டு இருப்பதனை உறுதி செய்து கொள்க
  • தொழில் முனைவோர் குறித்த விவரங்களைப் பதிவு செய்த பின் இணையப் பக்கம் காட்டும் அடையாள எண்ணைப் பின் பயன்பாட்டுக்காகக் குறித்து வைத்துக் கொள்ளவும்
  • விண்ணப்பங்களைக் குறைந்த செலவில் பதிவு செய்ய, தனியார் இணைய சேவை மையன்களைத் தவிர்த்து அரசு அலுவலக வளாகங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவன மின்னணு சேவை மையங்களை அணுகவும்
  • தேவைப்படும் அணனத்துத் தரவுகள் மற்றும் விவரங்களை அறிந்து திட்ட அறிக்கையினைத் தயார் செய்க
  • விண்ணப்பதினைப் பதிவு செய்த பின், பதிவிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஒப்புகையினை பதிவிறக்கம் செய்து பின் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளவும்
  • இடைத்தரகர் / செல்வாக்குடையவர் எனச் சொல்லிக் கொள்வோர் என எவரையும் நம்பி ஏமாறுதல் வேண்டாம்
  • திட்ட விவரம், பதிவிடுதல் மற்றும் செயலாக்கம் குறித்த எவ்வித அய்யப்பாடு, தெளிவுரை ,விளக்கம், இடையூறு குறித்த நேரடியாகவே ,தொலைபேசி /அலைபேசி /மின்னஞ்சல்/சமூக ஊடகங்கள் வழி மாவட்டத் தொழில் மையத்தினைத் தொடர்பு கொள்ளத் தயங்க வேண்டாம்
  • விண்ணப்பத்தினை பதிவிடும் போது தவறான/உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பதிவிடவோ, வேண்டுமென்றோ சில விவரங்களை மறைத்திடவோ வேண்டாம் . குறிப்பாக, இதற்கு முன்பாக, இதே திட்டத்தின் கீழ் அல்லது வேறு ஒன்றிய / மாநில அரசுத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருப்பின் அதனை மறைத்து இன்னொரு மமுறை மானியம் பெற முயல வேண்டாம்